தமிழக முதல்வருக்கு எப்போது நல்ல பெயர் கிடைக்கும்?

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகரான சென்னையில் கடுமையான அளவு கொரோனா பரவியுள்ள நிலையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரிக்க துவங்கியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கை மேற்கொண்டு, சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த அறிவுறுத்தியும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் அடங்காத வண்ணம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா மறைந்தது என்ற செய்தி தான் முதல்வருக்கு நல்ல பெயர் வாங்கி தரும். கொரோனாவை மறைப்பதால், எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாலும் நல்ல பெயர் வாங்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு சொல்கிறபடி நடந்து கொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும், அரசு மக்களிடம் நம்பகத்தன்மையை வைத்து வளர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.