கொரோனாவை வெல்ல யோகா.. பிரதமர் மோடி

ஜூன் 21 ஆம் தேதியான இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீட்டிற்குள் இருந்தவாறு யோகா செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி இன்று காலை நாட்டுமக்களிடையே உரையாற்றினார். இந்த நேரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, கொரோனா வைரஸின் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருந்து யோகா செய்யுங்கள்.

உங்களது வாழ்க்கையில் யோகாவை அங்கமாக பழக்குங்கள். உலக நாடுகளே ஒன்றிணைய வேண்டிய தினம் இது. யோகாவிற்கு மதம், மொழி, இனம் என்ற எந்த விதமான பேதமும் கிடையாது. யோகாவின் பயன்கள் குறித்து முன்னில்லாத அளவிற்கு அதன் நன்மைகளை நாடு உணர்ந்துள்ளது.

கொரோனா வைரஸை வீழ்த்த யோகா சிறந்த வழியாக இருக்கும். கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகாவை மேற்கொள்ளுங்கள். நமது உடலின் வலிமை மற்றும் மனவலிமை அதிகரிக்கும்.

நமது உடலின் நோயெதிர்ப்பு தன்மை யோகாவால் அதிகரிக்கிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூட பகவத் கீதையில் யோகாவை பற்றி எடுத்துரைத்துள்ளார் என்று கூறினார்..