ஆப்பிள் பழச்சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்..!!

இன்றுள்ள நிலையில் நாம் தினமும் ஓய்வில்லாது பணியாற்றி வருகிறோம். இதனால் நமது உடல் பல்வேறு சத்துக்களை இழந்து வருகிறது. இந்த சத்துக்களை சரி செய்ய ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டியது அவசியம். அந்த வகையில், ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் நண்மைகள் குறித்து காண்போம்.

ஆப்பிள் பழம் அல்லது இயற்கையான ஆப்பிள் சாறு (சுவைக்காக இரசாயனம் கலக்காத சாறு) குடித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். பெரும்பாலானோருக்கு ஏற்படும் முடி உதிரும் பிரச்சனை, பொடுகு பிரச்சனை போன்றவை நிரந்தரமாக சரியாகும்.

ஆப்பிளில் இருக்கும் பைட்டோ நியூட்ரியன்ஸ் மற்றும் ஆண்டிஆக்சிடண்டுகள் இரத்ததில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கும். இதில் குறைந்தளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் இருக்கும் காரணத்தால், சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடுவது நல்ல பலனை தரும்.

இதனைப்போன்று இதயத்திற்கு நல்ல வலுவினை ஏற்படுத்தும். கொழுப்பு சத்துக்களை குறைக்கும். உடல் எடையை குறைக்க உதவும். உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி செய்கிறது. புற்றுநோய் போன்ற பல நோய்களையும் குணமாக்க உதவி செய்கிறது. சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் அளவுடன் சாப்பிடலாம்.

குறிப்பாக ஆப்பிள் சாறில் இருக்கும் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் காரணமாக ஆப்பிளை அளவோடு சாப்பிடுவது நல்லது. பாக்கெட் மற்றும் பாட்டில்கள் வழியாக விற்பனை செய்யப்படும் ஆப்பிள் சாறுகளில் இரசாயனம் சேர்க்கப்படும் காரணத்தால், அது உடல் நலனிற்கு தீங்கை ஏற்படுத்தும்.