ஈரல் புற்றுநோயை கூட குணப்படுத்தும் லிச்சி பழம்!

லிச்சி பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடபட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது. முட்டை வடிவத்தில் இருக்கும்.

லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதிக நீர் சத்தை கொண்ட லிச்சி பழத்தை கோடைகாலங்களில் அதிகம் உட்கொள்ளலாம்.

அந்தவகையில் லிச்சி பழத்தை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

  • லிச்சி பழத்தில் உள்ள ஒரு இயற்கையான காரணி அது ஒரு வகையான அமினோ கேஸ் உருவாக்கி நம் தொப்பையில் இருக்கக்கூடிய கொழுப்பு சத்தைக் குறைப்பதற்கு பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. குறிப்பாக தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு லிச்சி பழம் நல்ல உதவியாக இருக்கிறது.
  • லிச்சி பழம் புற்றுநோய்க்கு எதிராக போராடக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது.ஏனெனில் இதில் உள்ள ஒரு வகையான காரணி ஆனது, ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.
  • லிச்சி பழத்தில் அதிகப்படியான விட்டமின் ஈ இருக்கிறது. சூரிய வெப்பத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வலிகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தோல் பளபளப்பாக போன்றவைகளுக்கு லிச்சி பழம் பெரிதளவில் உதவுகிறது.
  • லிச்சி பழம் நம் வயிற்றுக்குள் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கின்றது..இதில் இயற்கையாக உள்ள ஒரு காரணி வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் போன்றவைகளை சரி செய்ய உதவுகிறது.
  • லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இதனை உட்கொண்டால் செரிமானம் சீராக நடைப்பெற்று, கோடையில் ஏற்படும் வயிறு கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.
  • லிச்சி பழத்தை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும்.
  • லிச்சி பழத்தில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள், செல்களின் அசாதாரண வளர்ச்சியைத் தடுப்பதோடு, கண் புரை ஏற்படுவதையும் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • லிச்சிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.