ஞானசார தேரரின் குற்றச்சாட்டை துருக்கி தூதரகம் நிராகரிப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் குற்றச்சாட்டை துருக்கி தூதரகம் நிராகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் துருக்கியை தொடர்புபடுத்தியிருந்தமைக்கு இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இயங்கி வரும் அரேபிய சர்வதேச பாடசாலைகளில் கடும்போக்குவாத விடயங்கள் கற்பிக்கப்படுவதாகவும் இதற்கு முன்னார் அமைச்சர் ரிசாட் பதியூதீன் மற்றும் துருக்கிய அரசாங்கமும் உதவியதாக ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நூற்றாண்டுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான நட்புறவு காணப்படுவதாக துருக்கி தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுனாமி அனர்தத்தின் பின்னர் பல்வேறு வழிகளில் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாதம் காரணமாக பாதிக்கப்பட்ட நாடு என்ற ரீதியில் துருக்கி எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கையில் பயங்கரவாதம் காணப்பட்ட காலத்தில் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.