முன்னணி மாஸ் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்..!!

தமிழ் சினிமாவில் இருந்து அழிக்க முடியாத நடிகர்களில் மிக முக்கியான ஒரு நடிகர் சீயான் விக்ரம். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் கடாரம் கொண்டான்.

இப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் நடிகர் விக்ரமின் 60வது படத்தை முன்னணி மாஸ் இயக்குனரான கார்த்திக் சுப்ராஜ் இயக்க போகிறார் என சில தகவல்கள் தெரியவந்துள்ளது.

மேலும் இப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து முதல் முறையாக அவரின் மகன் துருவ் விக்ரமும் நடிக்க போகிறாராம். இது தான் செம மாஸ் காம்போவாக இருக்கும் என தற்போது ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.