நடிகர் வடிவேலுவின் புகாருக்கு மனோபாலாவின் அதிரடி!

நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்றதால், இந்தக் கூட்டணி படங்களிலும் தற்போது இணைந்து நடிப்பதில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் மனோபாலா யூடியூபில் நடத்திய பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்கமுத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இதற்கு வடிவேலு, கடந்த மாதம் 19-ம் தேதி சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதம் நேற்று முதல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் மனோபாலா இதுபற்றி கூறும்போது, “வடிவேலுவுக்கும் எனக்கும் 30 வருஷ நட்பு இருக்கு. அவர் என் மேல் ஏன் புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவரது நட்பை நான் இழக்க விரும்பவில்லை. வடிவேலு என்னை மன்னிச்சிரு என்று கூறியுள்ளார்.