காட்டுத் தீயாய் பரவும் கொரோனாவுக்கு மருந்து கண்டுப்பிடிப்பு! 11ம் திகதி முதல் நோயாளிகளுக்கு வழங்க திட்டம்… முக்கிய செய்தி

காட்டுத் தீயாய் பரவி கொண்டிருக்கும் கொரோனாவை குணப்படுத்த ரஷ்யா அவிஃபேவிர் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது.

எதிர் வரும் 11ம் திகதி முதல் நோயாளிகளுக்கு கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆர்டிஐஎஃப் என்ற ரஷ்ய நிறுவனத்தின் உதவியுட்ன் கெம்ரார் என்னும் மருந்துநிறுவனம் அவிஃபேவிர் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது.

இது கொரோனாவைக் கட்டப்படுத்துவதில் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த மருந்து ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்ததையடுத்து வரும் 11ம் திகதி முதல் நோயாளிகளுக்கு வழங்க உள்ளதாக ஆர்டிஐஎஃப் தலைவர் கிரில் திமித்ரியேவ் தெரிவித்துள்ளார்.