பெண் காவல் அதிகாரிக்கு லவ் டார்ச்சர்.. புடவை, செல்போன் வாங்கிக்கொடுத்து அட்டூழியம்.!!

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள கஸ்பா பகுதியை சார்ந்தவர் பால்ராஜ் (வயது 42). இவர் வேலூர் ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். சுமார் 5 மாதத்திற்கு முன்னதாக, ஆயுதப்படை பிரிவு 22 வயது பெண் அதிகாரியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இந்த விஷயத்திற்கு பெண் காவல் அதிகாரி மறுப்பு தெரிவித்த நிலையில், தொடர்ந்து காதல் தொல்லை வழங்கி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் அதிகாரி அங்குள்ள காவல் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கவே, பால்ராஜை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மீண்டும் பணிக்கு வந்த நிலையில், காதல் தொல்லையை துவக்கியுள்ளார். மேலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக பெண் அதிகாரிக்கு பிறந்தநாள் வந்த நிலையில், புடவை மற்றும் அலைபேசி, கிப்ட் போன்றவை வாங்கி கொடுத்து திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார்.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான பெண்மணி, வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், தலைமை காவலர் பால்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், 42 வயது காவல் அதிகாரி, 22 வயது பெண் அதிகாரிக்கு காதல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.