ஜூன் 1 முதல் இந்தியாவில் ரயில்கள் இயக்கப்படும்..

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் முடங்கியுள்ளது. குறிப்பாக கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கையை அன்றாட உணவுக்கே வழியின்றி முடங்கியுள்ளது.

இந்தியாவில் முதல் கட்டமாக ஏப்ரல் 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வைரஸை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் ஏப்ரல் 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. தற்போது ஊரடங்கு உத்தரவை நான்காவது முறையாக மே 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.

குறிப்பாக பொது போக்குவரத்துகளான பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. நான்காம் கட்ட ஊரடங்கு பிறகு பல மாநிலங்களில் பேருந்து இயக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். இயக்கப்படும் அனைத்து ரயில்களுக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.