பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி எடுக்கவுள்ள புதிய அவதாரம்..!!

நடிகர் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக மாறியவர். கடந்த 2012ல் வெளியான நான் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதன்பின் சலீம், இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட திரிபடங்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்தார். மேலும் தற்போது இவர் அக்னி சிறகுகள், காக்கி போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் 2016ல் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் எதிர்பார்க்காத வகையில் மிக பெரிய அளவில் வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை தற்போது நடிகர் விஜய் ஆண்டனி உருவாக்கி வருவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் இந்த இரண்டாம் பாகம் இன்னும் அதிக தரத்தில் இருக்குமாம், இப்படத்தின் டெக்னிகல் குழு பலரையும் ஆச்சார்ய படுத்தும் வகையில் எனவும் கூறியுள்ளார்.