கொரோனா காலத்தில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள்!

கொரோனா வைரஸ் உலகையே முடக்கி போட்டுவிட்டது. சீனாவின் வுஹான் சந்தையில் தொடங்கி உலகம் முழுக்க பரவி இந்தியாவை வந்தடைந்துவிட்டது. இதுவரை 4 ஆயிரம் பேர் இந்நோயால் இறந்துள்ளார்கள்.

கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சினிமா தொழில் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளது. படப்பிடிப்புகள் இல்லை. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால் இணையதளத்தில் சினிமா பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா காலத்தில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்துள்ளாராம்.

கடந்த முறை முதலிடத்தில் இருந்த சன்னி லியோனை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.