உலகளவிலான பாதிப்பில் 10 இடத்துக்கு வந்த இந்தியா…!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், கொரோனா வைரஸின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான சிகிச்சைகள் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியாவில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வந்தது. உலகளவில் கொரோனாவின் துவக்கத்தில் பாதுகாப்பு பட்டியலில் இருந்த இந்தியா, இன்று உலகளவில் முதல் 10 நாடுகளின் பட்டியலுக்குள் வந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தை பொறுத்த வரையில் கொரோனாவால் இந்தியாவில் 6,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்ந்துள்ளது.

77,103 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 57,720 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 4,021 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 50,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,577 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரையில் 16,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 111 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.