உங்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால் இதுதான் பலன்?

பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் மச்சம் என்பது இருக்கும். அந்த மச்சத்திற்கு சில பலன்கள் உள்ளது. அதிலும் கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்? என்று பார்ப்போம்.

வலது கன்னத்தில் மச்சம் :

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் வசீகரமான தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள். அந்த வசீகரமே அவர்களுக்கு பல வெற்றியைத் தேடித் தரும்.

அவர்கள் தனிமையை அதிகமாக விரும்புவார்கள். இருப்பினும் வேடிக்கை, விநோதங்களில் உற்சாகமாய் கலந்து கொள்வார்கள். ஆனால், யாரிடமும் அதிகமாய் பேச மாட்டார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு தாராளமாய் உதவி செய்வார்கள். ஆனால், அதை விளம்பரப்படுத்தி கொள்ள மாட்டார்கள்.

இடது கன்னத்தில் மச்சம் :

இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் போராடித்தான் ஒவ்வொரு வெற்றியும் பெற வேண்டும்.

எந்த காரியத்தை தொடங்கினாலும் ஏதாவது தடை தோன்றும். ஆனால், அவர்கள் சோர்ந்து போய்விடாமல் அதைப் பொறுமையாய் நீக்கிவிட்டு காரியத்தை வெற்றிகரமாய் செய்து முடிப்பார்கள்.

ஆண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால்…

ஆண்களின் வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் ஆசைகள் அதிகம் கொண்டவர்கள். எதிலும் திட்டமிட்டு செயல்படாதவர்கள். சிறந்த ஞானம் உடையவர்கள்.

இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

பெண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால்…

பெண்களுக்கு வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் காரிய வெற்றி உடையவர்கள். தனிமையை விரும்பக்கூடியவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் இவர்கள் வசதியாக, மகிழ்ச்சியாக வாழ்வார்கள். தனக்கான இடத்தில் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.