பிரபல நடிகருக்கு அம்மாவானார் காதலுக்கு மரியாதை நடிகை!

விஜய், ஷாலினி, ஸ்ரீவித்யா, சிவக்குமார் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினிக்கு தோழியாக நடித்தவர் பூர்ணிமா இந்திரஜித். மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் நிவின் பாலிக்கு அம்மாவாக துறைமுகம் என்ற மலையாளம் படத்தில் அவர் நடிக்கிறாராம். நிவின் பாலுக்கு வயது 35. அதே வேளையில் 39 வயதான பூர்ணிமா எப்படி அம்மாவாக நடிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் படம் 3 விதமான கால கட்டங்களில் நிலவுவதால் இளம் வயது நிவின் பாலிக்கு அம்மாவாக நடிக்கிறாராம் பூர்ணிமா.

பூர்ணிமா நடிகர் இந்திரஜித்தின் மனைவி மற்றும் நடிகர் பிரித்வி ராஜுக்கு அண்ணி என்பதும் குறிப்பிடத்தக்கது.