உலக அழகி பட்டத்தை வென்றாலும் ஐஸ்வர்யா ராய் செய்த செயல்!..

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், கிரீடத்துடன் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

1994 ஆம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில் பட்டத்தை வென்றார் ஐஸ்வர்யா ராய்.

இதனையடுத்து தமிழ் உட்பட பல மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, தற்போது உலகமே அறியும் பிரபலமான ஐஸ்வர்யா ராய், மணிரத்னத்தின் வரலாற்றுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கிரீடத்துடன் ஐஸ்வர்யா ராய், தரையில் அமர்ந்து சாப்பிடும் புகைப்படமொன்று வைரலாகி வருகிறது.

அதாவது உலக அழகியாக அவர் பட்டம் பெற்றவுடன் அந்த உடையுடன் தலையில் கிரீடத்தைத் தாங்கியபடி தரையில் உட்கார்ந்து இந்தியப் பாணியில் உணவை உண்கிறார். அவருடன் அவரது தாயாரும் உள்ளார்.

அழகி பட்டத்தை வென்ற பின்னரும் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.