முறுக்கு கடையில் அம்மாவுடன் வேலை செய்யும் பிரபல தொகுப்பாளினி!

பிரபல தொகுப்பாளினி மணிமேகலை கொரோனா ஊரடங்கு காரணமாக கிராமத்தில் மகிழ்ச்சியாக நாட்களை கழித்து வருகின்றனர்.

அவ்வப்போது கிராமத்தினர் உடன் சேர்ந்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் அவரது பதிவுகள் இணையத்தில் தீயாய் பரவி வந்தது.

அந்த வகையில் அவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.


கிராமத்தில் இருக்கும் ஒரு அம்மாவுடன் சேர்ந்து முறுக்கு கடை ஆரம்பித்துள்ளார். அவர் கையால் முறுக்கு சுடுகிறார்.

மேலும் கடைக்கு ‘மணிமேகலை முறுக்கு கடை’ என்று பெயர் வைத்துள்ளனர். பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த வீடியோவில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.