பேசமறுத்த காதலியை மிரட்டி ரூ.5 இலட்சம் இழப்பீடு கேட்ட காதலன்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் அருகேயுள்ள இடையார்பாளையம் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 25). இவர் அலைபேசி கடையில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த சில வருடத்திற்கு முன்னதாக சுந்தராபுரம் பகுதியை சார்ந்த கல்லூரி மாணவியிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கிருஷ்ணகுமாரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்துள்ளனர். மேலும், கடந்த நான்கு மாதமாக மாணவி கிருஷ்ணகுமாரிடம் பேசுவதை தவித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காமுகன் சிறுமியின் இல்லத்திற்கு சென்று தகராறு செய்துள்ளான். மேலும், ரூ.5 இலட்சம் பணம் கொடுக்காவிடில், இருவரும் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மாபிங் செய்து வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

இதனால் பயந்துபோன சிறுமி அங்குள்ள குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் காமுகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.