பாக்கிஸ்தான் விமான விபத்தில் பிரபல மாடல் அழகி பலி..!!

பாக்கிஸ்தான் நாட்டின் லாகூரில் இருந்து கராச்சி நகருக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் நேற்று விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 91 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 100 பேர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்து ஏற்பட்டதும் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த 98 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மட்டும் உயிர் தப்பியுள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்த நபர்களில் பாகிஸ்தானின் பிரபல மாடல் அழகியான சாரா அப்பிட்டும் ஒருவராக இருந்துள்ளார்.

இவர் இறந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தகவல் ஆடை வடிவமைப்பாளர் கதிஜா ஷா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த இரங்கலை அடுத்து உறுதியாகியுள்ளது.