பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளை…!!

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளை அரங்கேறியுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கானது கொரோனா தாக்கத்தின் காரணமாக அமல்படுத்தப்பட்டது.

தற்போது நான்காவது முறையாக அமலாகியுள்ள ஊரடங்கு, தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு பல பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், திருப்பூரில் நகர் பகுதியில் நகைக்கடையானது திறந்து வைக்கப்பட்டு இருந்தது.

இந்த கடைக்கு இன்று காலை வருகை தந்த நபர், திடீரென தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து பணம் மற்றும் நகையை கொடுக்கச்சொல்லி மிரட்டியுள்ளான். சுமார் 10 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்துடன் கொள்ளையன் தப்பி சென்றுள்ளான்.

இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பட்டப்பகலில் நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது.