தளபதி 65 குறித்து மாஸ் தகவலை கூறிய பிரபல இயக்குனர்..!!

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் படம் தளபதி 65. ஆம் கூட்டணி இன்னும் முடிவாகாத காரணத்தினால் படத்தின் பெயருக்கு பதிலாக தளபதி 65 என அழைக்கப்படுகிறது.

இப்படத்தை முன்னணி இயக்குனரான ஏ. ஆர். முருகதாஸ் தான் இயக்க போகிறார் என்று 90% சதவீதம் செய்திகள் உறுதியாகியுள்ளது.

மேலும் இப்படத்தை முன்னணி தயாரிப்பாளர் நிருவமான சன் பிச்சர்ஸ் தயாரிக்க போகிறது. இதனை தொடர்ந்து இப்படம் துப்பாக்கி 2 வாக இருக்கலாம் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஏ. ஆர். முருகதாஸிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து, தற்போது வளர்ந்து வரும் இயக்குனராக திகழ்ந்து வருபவர் அஜய் ஞானமுத்து.

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ” தளபதி 65 மிக பெரிய படமாக இருக்கும், அதற்கு நான் உறுதியளிக்கிறேன் ” என்று கூறியுள்ளார்.