சிறுமியின் பிரேதத்தை பலாத்காரம் செய்த 51 வயது காமுகன்..!!

அசாம் மாநிலத்தில் உள்ள தேமாஜி மாவட்டத்தில் உள்ள கல்லறையில் 15 வயது சிறுமியின் உடலுடன் 51 வயது முதியவன் பலாத்கார நடவடிக்கையில் ஈடுபட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமி சம்பவத்தன்று மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், சிறுமியின் உடலை பெற்றோர்கள் அடக்கம் செய்துள்ளனர். கடந்த மே மாதம் 18 ஆம் தேதியன்று சிறுமியின் உடல் கல்லறையில் புதைக்கப்பட்ட நிலையில், ஆகான் சைக்யா என்ற 51 வயது முதியவர் சிறுமியின் உடலை தோண்டியெடுத்துள்ளார்.

பின்னர் சிறுமியின் சடலத்தை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதிமக்கள், முதியவரை அடித்து நொறுக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், முதியவர் பிணத்தை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர் ஜாமினில் வெளியான நபர் என்பதால் மீண்டும் காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.