அஜித்-ஷாலினிக்கு என்னதான் ஆச்சி.. தனியார் மருத்துவமனைக்கு திடீர் விஜயம் ஏன்?

தமிழ் சினிமாவில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் யாருடைய உதவியும் இல்லாமல் பெரிய இடத்திற்கு வந்தவர் நடிகர் அஜித்குமார். பல தோல்விகள், பல சிகிச்சைகள் என இவர் பார்க்காத கஷ்டங்களே கிடையாது. அந்தவகையில் தன் வாழ்க்கையில் கடின உழைப்புடன் வாழ்ந்து எந்தவித பப்ளிசிட்டியையும் தேடாத ஒரு மனிதர் என்று பலரால் கூறப்பட்டு வருகிறது.

இதையடுத்து நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது கொரானா பாதிப்பு உலகளவில் 50லட்சத்தை தாண்டி வரும் நிலையில் நாடுமுழுவதும் லாக்டவுனில் இருந்து வருகிறது.

சினிமாத்துறையினர் லாக்டவுனால் அன்றாட வாழ்க்கையிழந்ததற்காக அஜித் அவரால் முடிந்த தொகையை கொடுத்து உதவினார்.

இந்நிலையில் அவரது மனைவியுடன் தனியார் மருத்துவமனைக்கு திடீர் விஜயமாகியுள்ளார் என்ற வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி ரசிகர்கள் மத்தியில் குறிவருவது என்னவென்றால், ` அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சாதாரணமான செக்கப்பிற்காகதான் அவர் கூட்டி வந்துள்ளார்.

அவர் ரெகுலராக செல்லும் தனியார் மருத்துவமனைக்கு தான் மாஸ்க்குடன் சென்றுள்ளார் என்றும் அதனை அந்த மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.