சிறுமியின் வாழ்க்கை சீரழிந்தது எப்படி?.. காமுகன் குறித்த பரபரப்பு தகவல்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரம்பூர் கக்கன் காலனி பகுதியை சார்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவரது தாய் மாரியம்மாள் மற்றும் அண்ணன் மணிகண்டன் ஆகியோருடன் வைசத்து வந்துள்ளார். மணிகண்டன் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த பெண்ணை கடந்த 2018 ஆம் வருடத்தில் கரம்பிடித்துள்ளார்.

இதனையடுத்து பள்ளி படிப்பினை பாதியில் விட்ட சிறுமி, அங்குள்ள வளம்பங்குடிக்கு சென்று தனது சகோதரன் மணிகண்டன் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளார். மேலும், சிறுமியின் தாயும் தனது மகன், மகளுடன் தங்கியிருந்து வந்துள்ளார்.

அங்குள்ள குருங்குளம் மேட்டுப்பட்டி பகுதியில் துணிக்கடைக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் பணியை செய்து வந்தவன் பால்ராஜ் (வயது 43). இவனிற்கு சிறுமி குறித்த தகவல் தெரியவரவே, சிறுமியின் குடும்ப சூழ்நிலையை உபயோகம் செய்து கடந்த 2019 ஆம் வருடத்தில் புதுக்கோட்டையில் சிறுமியை உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து முடித்துள்ளேன்.

சிறுமிக்கு திருமணத்திலேயே விருப்பம் இல்லாது நடந்த நிலையில், சிறுமியை மிரட்டி காமுகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், திருமணம் முடிந்த சில நாட்களுக்கு உள்ளாகவே சிறுமியின் தாயார் இயற்கையை எய்திய நிலையில், சிறுமியை மேட்டுப்பாட்டிக்கு அழைத்து வந்த பாலராஜ், தினமும் சிறுமியை வீட்டில் துன்புறுத்தி வந்துள்ளான். மேலும், தினமும் பாலியல் சித்ரவதையும் செய்து வந்துள்ளான்.

இந்த சமயத்திலேயே, சிறுமிக்கு 20 வயது பூர்த்தியடைந்தது போல மோசடியான சான்றிதழ் தயார் செய்து, தஞ்சாவூரில் இருக்கும் தங்கும் விடுதியில் பணிக்கு சேர்த்துவிட்டுள்ளான். கடந்த மார்ச் மாதத்தின் போது மறைந்த முதலவர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா திருமணத்தில், ஏற்கனவே திருமணம் செய்த சிறுமியை, தங்க நகை மற்றும் சீருக்காக அங்குள்ள அற்புதாபுரத்தில் மீண்டும் திருமணம் செய்துள்ளான்.

பின்னர் இதில் கிடைத்த நகையை வாங்கி அடமானம் வைத்த நிலையில், நேற்றுமுன்தினத்தின் போது அங்குள்ள மேட்டுப்பாட்டியை சார்ந்தவர்களுக்கும், பால் ராஜிற்கும் ஏற்பட்ட தகராறில், தகராறு செய்த நபர்களை பழிவாங்க, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யும் நோக்கில் பொய் புகார் அளிக்க பாலராஜ் சிறுமியை மிரட்டியுள்ளான். இதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே, சிறுமியை காமுகன் அடித்து துன்புறுத்தியுள்ளான்.

சிறுமி அங்கிருந்து தப்பி சென்று அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்கவே, இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வல்லம் மகளிர் காவல் நிலையத்திற்கு சிறுமியை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிறுமியின் புகாரின் அடிப்படையில், பாலராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.