பிளாக் டீ குடிக்க மட்டும் அல்ல! வெட்டுக்கள், சிராய்ப்புகளுக்கும் பயன்படும்

காபிக்கு மாற்றாக சிலர் ப்ளாக் டீ அருந்துவது வழக்கம். ஆனால் இந்த ப்ளாக் டீ உடலுக்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் பல்வேறு அற்புத நன்மைகளை வாரி வழங்குகிறது.

பிளாக் காபியில் ஏராளமான ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் நிறந்திருந்துள்ளது. இதயத்தின் ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கும் நிறைய மூலப்பொருள்கள் பிளாக் டீயில் உண்டு.

நம்முடைய உடலில் சேருகின்ற எல்டிஎல் கொலஸ்ட்ரால் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் சேர விடாமல் பாதுகாக்கிறது.

அதனால் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு ஆகியவை கட்டுக்குள் வைக்கிறது.

பிளாக் டீ வெறுமனே குடிப்பதற்கு மட்டும் அல்ல, பிளாக் டீ நம்முடைய வெளிப்புறத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு அப்ளை செய்யலாம்.

பிளாக் டீ வெளிப்புறத்தில் எப்படி பயன்படுகிறது என்பதை பார்ப்போம்

 • ப்ளாக் டீயில் உள்ள டேனின் ஒரு வலி நிவாரணியாக பயன்படுகிறது, வெட்டுக்கள் அல்லது சிராய்ப்புகளில் ஏற்படும் இரத்த போக்கை நிறுத்த பிளாக் டீ உதவி செய்கிறது.
 • குளிர்ச்சியாக இருக்கும் டீ பேக்கை எடுத்து சிராய்ப்பு உள்ள இடத்தில் தடவினால் பாதிக்கப்பட்ட இடம் ஒரு இதமான நிவாரணத்தைப் பெறும். வீக்கமும் குறையும்.
 • உடலில் ஏற்படும் வெட்டுக் காயங்களின் மேல் ஆறிய டீ டிக்காஷனை காட்டனில் நனைத்து காயங்களின் மேல் தடவினால் அந்த காயங்கள் இன்ஃபெக்ஷன் ஆகாமல் தடுக்க முடியும்.
 • பாதங்களில் ஏற்படும் துர்நாற்றம் அனைவருக்கும் ஒரு வித அசௌகரியத்தை உண்டாக்கும். ப்ளாக் டீயை பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளித்தால் இந்த ப்ளாக் டீயில் உள்ள டானிக் அமிலம் கிருமிகளைக் கொன்று துளைகளை அடைக்கிறது. உங்கள் பாதங்களில் குறைவான வியர்வை உண்டாக உதவுகிறது.
 • ப்ளாக் டீயில் டானிக் அமிலம் உள்ளது. இது வலி நிவாரணி தன்மை கொண்டுள்ளது. உங்கள் ஈறுகள் வீக்கமடைந்தால் , ஈரமான டீ பேக்கை நேரடியாக ஈறுகளில் வைக்க வேண்டும். இதனால் வீக்கம் குணமடையும். உங்கள் ஈறுகள் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
 • ப்ளாக் டீயை மவுத் வாஷ் போல்கூட பயன்படுத்தலாம், பிளாக் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடலுக்கு ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.
 • சிலருக்கு கண் வறண்டு ஒரு வித அரிப்பு கொடுக்கும். ப்ளாக் டீ பேக் இரண்டு எடுத்து 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற விட்டு, அதில் உள்ள அதிக நீரைப் பிழிந்து விட்டு டீ பேக்கை உங்கள் கண்களில் மேல் 10 நிமிடம் வைத்து காத்திக்க வேண்டும். பின்னர் முகத்தை கழுவினால் உங்கள் கண் எரிச்சல் குறையும்.
 • இரவு தூங்கும் முன் ஒரு காட்டனில் குளிர்ந்த பிளாக் டீயை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு தூங்கினால் கண்களில் ஏற்படும் சோர்வு, கண்ணுக்குக் கீழ் உண்டாகும் கருவளையம், கண்ணெரிச்சல் போன்ற பல பிரச்சினைகள் தீரும்.
 • சளியினால் உண்டாகும் புண்களுக்கான மற்ற தீர்வுகள் போல் ப்ளாக் டீயில் பிளவனாய்டு மற்றும் டேனின் ஹெர்பஸ் வைரஸின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.
 • சிலருக்குச் சளி அதிகரிக்க அதிகரிக்க மூக்கின் ஓரங்களிலும் உள் பகுதியிலும் புண்கள் உண்டாகும். அந்த புண்களுக்கு என்னதான் மருந்து போட்டாலும் புண் அதிகமாகுமே தவிர, ஆறாது. அந்த பிரச்சினைக்கு மிகச் சிறந்த தீர்வை பிளாக் டீயால் தர முடியும்.
 • நன்கு குளிர்வித்த பிளாக் டீயை காட்டனில் நனைத்து அந்த சளிப் புண்களின் மேல் வையுங்கள். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இதை செய்தாலே நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை உங்களால் உணர முடியும்.
 • ஒவ்வாமை காரணமாக நீங்கள் பாதிக்கப்பட்டால் ப்ளாக் டீ உங்களுக்கு சிறந்த தீர்வைத் தரும். டீயில் பிளவனாய்டு அதிகம் உள்ளது.
 • இமைப்படல அழற்சி பாதிப்பைக் குறைக்கும். இமைப்படல அழற்சி காரணமாக கண்கள் சிவந்து காணப்படலாம். இந்த பாதிப்பு உங்களுக்கு ஏற்பட்டால் வெதுப்பான ப்ளாக் டீ பேக்கை பாதிக்கப்பட்ட கண்ணில் 5 நிமிடம் வைக்கவும். பின்பு குளிர்ச்சியான டீ பேக்கை 2 நிமிடங்கள் தொடர்ந்து வைக்கவும். டீயில் உள்ள டேனின் வீக்கத்தைக் குறைக்க உதவும். ஒரு நாளில் பலமுறை இதனைப் பின்பற்றினால் பலனை பெறலாம்.
 • வயிற்றுப் போக்கை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மிகச்சிறந்த நிவாரணியாக இந்த பிளாக் டீ இருக்கிறது. அதனால் தான் வயிறை சுத்தப்படுத்துகிற பொழுது, சூடான பிளாக் டீ குறிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 • ஒரு நாளில் 4-5 முறை தொடர்ந்து 15 நிமிடங்கள் வெதுவெதுப்பான டீ பேக்கை கொப்பளத்தில் வைப்பதால் வீக்கம் குறைந்து கொப்பளம் மறையும்.
 • வெளி மூலம் மற்றும் உள் மூலம் ஆகிய இரண்டுக்குமே மிகச் சிறந்த மருந்தாக இந்த பிளாக் டீயை பயன்படுகிறது.
 • பிளாக் டீயை மேற்கண்ட ஆரோக்கியக் காரணங்களுக்காக பயன்படுத்துகிற பொழுது, எந்தவித பக்க விளைவுகளும் இல்லாத சிறந்த மருந்தாக இது பயன்படும்.

பாதங்களை அழகூட்டும் பிளாக் டீ

 • தண்ணீரில் 2 டீ பேக் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
 • டீ பேக்கை வெளியில் எடுத்து விட்டு, அந்த பிளாக் டீயில் இன்னும் அதிக தண்ணீர் சேர்க்க வேண்டும்.
 • இந்த கலவை ஆறியவுடன் அந்த நீரில் உங்கள் பாதங்களை 15 முதல் 30 நிமிடங்கள் ஊறவிட வேண்டும்.
 • இதனை தினமும் செய்து வரவும். பின்பு அத்தியாவசிய எண்ணெய் சில துளிகள் எடுத்து உங்கள் பாதங்களில் தடவி அதனை வாசனையுடன் வைத்துக் கொள்ளவும்.
 • இதனால் உங்கள் பாதங்கள் மிக அழகாக வசீகரிக்கும்.