42 வயதில் பெண் குழந்தைக்கு அம்மாவாகிய நடிகை சங்கவி… குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம்!

அஜித்தின் அமராவதி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை சங்கவி 42 வயதில் பெண் குழந்தைக்கு அம்மாவாகி உள்ளார்.

90- களில் முன்னணி நடிகையாக இருந்த சங்கவி, ரஜினி, விஜயகாந்த், கமல், சரத்குமார் உட்பட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பல மொழிகளில் நடித்த இவர் பின்பு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். கடைசியாக, மூடர் கூடம் நவீன் தயாரித்த கெளஞ்சி என்ற படத்தில் நடித்திருந்தார்.

தனது 38 வது வயதில் கடந்த 2016ம் ஆண்டு, பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குகுப் பின்பு அதிகப் படங்களில் நடிக்காத சங்கவி, ஒரு சில படங்களில் நடித்து வந்ததோடு, கணவர் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகின்றார்.

 

View this post on Instagram

 

Temple visit

A post shared by Sangavi Kavya Ramesh (@sangavi_venkatesh) on


இந்நிலையில் தனது 42 வது வயதில் அவர் தனது முதல் குழந்தையைப் பெற்றுள்ளார். தனது குழந்தையின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சங்கவி, எனது அழகான தேவதை என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sangavi Kavya Ramesh (@sangavi_venkatesh) on