ஒரு வயது குழந்தையின் இறப்பு.. முகம் காண துடித்து கதறி அழுத தந்தை..!!

தனது ஒரு வயது குழந்தை இறப்பு செய்தி அறிந்த தந்தை சாலையிலேயே கதறி அழுத புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனவைரையும் கண்கலங்க வைத்துள்ளது.

பிகாரை சேர்ந்த தொழிலாளியான ராம்புகார் பண்டிட் என்பவர், ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் சிக்கிக்கொண்டார். இந்த நிலையில் தன் ஒரு வயது மகன் இறப்பு செய்தியை மனைவி கூறியதை கேட்ட ராம் பண்டிட் உடனடியாக பிகாருக்கு புறப்பட தொடங்கினார்.

அப்போது, குழந்தையை முகத்தை காண வேண்டும் என எண்ணி, சாலையிலேயே அமர்ந்தபடி கதறிய அழுத புகைப்படம் வெளியாகி அனைவரையும் நெஞ்சை உருக வைத்துள்ளது.

பிடிஐ புகைப்படக் கலைஞர் அதுல் யாதவ் எடுத்த இந்த புகைப்படம், ஊரடங்கு ஏற்படுத்திய துயரத்தின் சுவடாக அமைந்தது. இறுதியில் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியால், இறுதியாக ராம் பண்டிட் பிகார் சென்றார்.