மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியை கட்டுப்படுத்தனுமா?

பெண்கள் மாதாமாதம் சந்திக்கிற பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய். குறிப்பிட்ட ஐந்து நாட்களில் பெண்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏராளமான உபாதைகளை சந்திப்பார்கள்.

மாதவிடாய் நிகழ்வின் போது பெண்களுக்கு வயிற்றில் உள்ள கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் தசைகள் இறுக்கம் அடைந்து விடுகிறது.

இதனால் மாதவிடாயின் போது, பெண்களுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி, முதுகுவலி, இடுப்புவலி, தலைவலி, மன உளைச்சல், சோர்வு, உடம்புவலி போன்ற அனைத்து பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

இதனால் எந்த வேலையில் செய்ய முடியமால் நம்மை முடக்கி விடுகின்றது.

அந்தவகையில் தற்போது இந்த நாட்களில் ஏற்படும் வலிகளை இயற்கை உணவுகள் கொண்டு சரி செய்ய முடியும்.

தற்போது இந்த நாளில் தவிர்க்காமல் எடுத்துகொள்ள வேண்டிய உணவு பொருள்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

 • தினம் காலையும் இரவும் ஒரு டம்ளர் பால் தவிர்க்காமல் குடியுங்கள். மிதமான சூட்டில் நாட்டுசர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
 • அடி வயிற்று வலியால் அவதிப்படும் பெண்கள் அவர்கள் சாதத்துடன் கெட்டித்தயிர் அல்லது இரண்டு கப் தயிரை தினமும் எடுத்துகொள்வதன் மூலம் கால்சியம் இழப்பு நேராமல் தடுக்கலாம்.
 • இரவு ஒரு கைப்பிடி பாதாமை ஊறவைத்து மறுநாள் தோல் உரித்து சாப்பிடலாம். நாள் முழுக்க உடல் சோர்வில்லாமல் இருக்கலாம்.
 • மாதவிடாய் நாட்களிலும் அதற்கு பிந்தைய நாள்களிலும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் உணவை எடுத்துகொள்ள வேண்டும்.
 • காய்கறிகள், கீரைகள். பருப்புகள், தானியங்கள் இரும்புச்சத்து நிறைந்தவை சாப்பிடலாம்.
 • பேரீச்சம்பழம் சாப்பிடலாம். காலை, இரவு என்று பிரித்து வேளைக்கு 3 அல்லது 4 பழங்கள் வரை சாப்பிடலாம்.
 • பழங்களில் மாதுளையை சாறு பிழிந்து குடிக்கலாம். வேளைக்கு ஒரு பழம் என்று உலர் அத்திபழம் சாப்பிடலாம்.
 • கொய்யாபழத்தை சாப்பிடுவதும் நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறு டப்பாவில் உலர் திராட்சை, பேரீச்சை பழம், அத்திபழம் போன்றவற்றை எடுத்து செல்லலாம்.
 • மாதவிடாய் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கலுக்கு வாழைப்பூ, வாழைத்தண்டு, பீன்ஸ், முளைகட்டிய தானியங்களை எடுத்துகொள்ளலாம்.
 • மென்மையான உணவுகள் வயிற்றை மிதமாக வைத்திருக்க உதவும். காரமான, எண்ணெய் நிறைந்த, கொழுப்பு நிறைந்த உணவுகள், இறைச்சி வகைகள் தவிர்க்க வேண்டியது ஆகும்.
 • வயிறு வலியை குறைக்கும் அமிலம் நிறைந்த சோடா பானங்கள், செயற்கை குளிர்பானங்கள் தவிர்க்க வேண்டும்.
 • மாதவிடாய் நாட்களில் உப்பு அதிகமுள்ள உணவுகள் எடுக்கவேண்டாம். அதே போன்று உணவை ஒரே நேரமாக எடுத்துகொள்ளாமல் அவ்வபோது சிறிது சிறிதாக சாப்பிடுவதும் நன்மை தரும். இயன்றவரை திரவ ஆகாரங்கள் குடிப்பது நல்லது.
 • மிதமான வெந்நீரில் எலுமிச்சை பிழிந்து குடிக்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
 • இயன்றவரை நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துகொள்வதும் நல்லது. உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் உடல் பாதிப்படைவதோடு மன அழுத்தமும் அதிகரிக்க தொடங்கும்.