நண்பரின் மனைவி தன்னுடன் வாழ வர மறுத்ததால்! அரங்கேறிய கொடூரம்!

இந்தியாவில் நண்பரின் மனைவி, தன்னுடன் வாழ மறுத்ததால், நெஞ்சில் சுட்டுக் கொண்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டெல்லியின் திக்ரி குர்த் பகுதியில், விகாஸ் என்ற நபர் நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து டெல்லி பொலிசார் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அவரின் பெயர் விகாஸ் வயது 27 என்பது தெரியவந்தது.

இவர் தனது நண்பர் ரமேஷின் மனைவி ரூபாவுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். ரமேஷ் சிறையில் இருந்து வரும் நிலையில் ரூபா, சுவரண் ஜெயந்தி விஹார் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் விகாஸிற்கு, ரூபா மீது காதல் ஏற்பட, தன்னுடன் வாழ வரும்படி அவரை கெஞ்சியுள்ளார்.

ஆனால் ரூபா அதற்கு ஒப்புக் கொள்ளாததால் மனம் உடைந்த விகாஸ், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தனது நெஞ்சில் சுட்டுக் கொண்டார்.

உடனடியாக ரூபா காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து, விகாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விகாஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.