காதலனுடன் லாட்ஜில் சிக்கிய மகள் செய்த கொடூர செயல்..!!

காதலனுடன் சேர்ந்து வளர்ப்பு தாயை கொடூரமாக கொன்றுவிட்டு தலைமறைவான ஜோடியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூரின் கீழக்குடிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள், இவரது மகன் பழனிவேல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.

இதனால் ஒரு வயது பெண் குழந்தையான கவிதாவை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பச்சையம்மாளின் கணவர் பெருமாள் உயிரிழந்தார்.

கவிதாவும், அதே ஊரை சேர்ந்த மணிகண்டனை காதலித்து வந்த நிலையில் ரகசியமாக 6 மாதங்களுக்கு முன்னர் திருமணமும் செய்து கொண்டதாக தெரிகிறது, இதனால் கவிதா பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டார்.

இதுபற்றி தெரியவந்ததும் பச்சையம்மாள் கண்டிக்க, காதல் கணவனை பிரிந்திருப்பது போல் நாடகமாடியுள்ளார் கவிதா.

சமீபத்தில் இருவரும் தனிமையில் இருந்த போது பார்த்து விட்ட பச்சையம்மாள் மகளை கடுமையாக கண்டித்துள்ளார்.

இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்னர் பச்சையம்மாள் சடலமாக மீட்கப்பட்டார், கியாஸ் கசித்து தன்னுடைய தாய் இறந்துவிட்டதாக கூறிய கவிதா, காதலனுடன் தலைமறைவானார்.

இதுபற்றி விவரம் அறிந்ததும் விரைந்து சென்ற பொலிசார் பச்சையம்மாளின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர்.

மேலும் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த காதல் ஜோடியை கைது செய்தனர்.

விசாரணையில் தெரியவந்த தகவல்கள்,

சம்பவத்தன்று, காதலன் குடிபோதையில் காதலியை சந்திக்கச் சென்றுள்ளான். தன்னை வீட்டிற்குள் விட மறுத்து பச்சையம்மாள் கண்டித்ததால் ஆத்திரமடைந்தவர், அவரை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளான்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் நெற்றிப்பொட்டில் அடிபட்டு மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார்

பின்னர், காதலியுடன் சேர்ந்து வீட்டுக்கு வெளியே இருந்த கடப்பாக் கல்லை தூக்கிவந்து பச்சையம்மாளின் தலையில் போட்டு நசுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இதனை தீவிபத்தாக மாற்ற எண்ணி, அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி, கியாஸ் அடுப்பை திறந்து தீப்பற்ற வைத்ததும் தெரியவந்தது.

விடிந்ததும், எரிவாயுக் கசிவால் ஏற்பட்ட விபத்தில் பச்சையம்மாள் இறந்து விட்டதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் நாடகமாடி விட்டு, வில்லங்க காதல் ஜோடி தப்பிச்சென்றது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த பொலிசார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.