மகளின் கொலைக்கு நீதி கேட்டு கதறிய தாய்…மனதை உருக்கும் சம்பவம்

தமிழகத்தையே அதிர வைத்த தீ வைத்து எரிக்கப்பட்ட விழுப்புரம் சிறுமியின் தாயார் பத்திரிகையாளர்களிடம் வைத்துள்ள வேண்டுகோள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

ஜெயபால் மற்றும் ராஜி தம்பதியினரின் மகள் தான் ஜெயஸ்ரீ. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியில் வசிக்கும் இவர்கள் விவசாயக் கூலி வேலையும், சொந்தமாக பெட்டிக்கடையும் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு மேலும் இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். தனது வீட்டிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜெயஸ்ரீயைக் கட்டிவைத்து அவரது மீது, பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்ததில், சிறுமி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து குற்றவாளிகளைக் கைது செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், எவ்வாறு கொலை செய்தோம், எதற்காக கொலை செய்தோம் என்பதை குற்றவாளிகள் நேற்றைய தினத்தில் வாக்குமூலமாக கொடுத்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் தாயார் பேசகூட முடியாமல், பத்திரிக்கையாளர்களிடம் கோரிக்கை வைத்தது மட்டுமின்றி, இறுதியில் காலில் விழுந்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.