இந்தியாவில் 4ஆம் கட்ட ஊரடங்கு…நாட்டு மக்களுக்கு அறிவித்த பிரதமர்!

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி மூன்றாவது முறையாக உரையாற்றினார்.

அதில் இடம்பெற்ற 10 முக்கிய தகவல்கள்

1. ஒரு வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே பாதித்துள்ளது என்றும் இந்த உலகமே நான்கு மாதகாலமாக கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது.

2. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தொடங்கிய சமயத்தில் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் ஒன்று கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. அப்போது சில N-95 முகக் கவசங்கள் மட்டுமே இருந்தன. இப்பொழுது நாள்தோறும் இரண்டு லட்சம் மருத்துவப் பாதுகாப்பு உடைகள் மற்றும் இரண்டு லட்சம் N-95 முகக் கவசங்கள்ஆகியவை இந்தியாவில் தயாரிக்கப் படுகின்றன.

3. “உலகெங்கும் 42 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியர்களில் பலரும் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,”

4. தொழில்துறையை மேம்படுத்தவும், நடுத்தர மக்களுக்காகவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுகாகவும், 2020ஆம் ஆண்டில் தற்சார்பு இந்தியா திட்டம் என்ற பொருளாதார உதவி தொகுப்பு இந்திய அரசால் வழங்கப்படும்.

5. கொரோனா பரவலால் உண்டாகியுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக இந்திய அரசு ஏற்கனவே அறிவித்த உதவித்தொகுப்பு, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த உதவித் தொகுப்பு மற்றும் தற்போதைய உதவித் தொகுப்பு ஆகியவை ஒட்டுமொத்தமாக 20 லட்சம் கோடி ரூபாய். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 10%,” என்று அவர் கூறினார்.

6. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான உலகத்தின் போராட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் புதிய நம்பிக்கை கொடுப்பதாகவும், இதன் காரணமாக இந்தியா உலகெங்கும் பாராட்டப்படுவதாகவும், குறிப்பிட்டார்.

7. தற்போது இந்தியா எதிர்கொண்டுள்ள பிரச்சனை முன்னெப்போதும் சந்தித்திராத நெருக்கடி. ஆனாலும் நம்மால் அதை விட்டுவிட முடியாது.

8. இந்தியா தற்சார்பை வலியுறுத்தும் நாடாக இருப்பதாகவும், இந்தியா வலியுறுத்தும் தற்சார்பில் உலகத்தின் மகிழ்ச்சி ஒத்துழைப்பு மற்றும் அமைதி ஆகியவை குறித்த கவலை ஏற்பட்டுள்ளது.

9. மே 17ஆம் திகதி தற்போதைய மூன்றாவது ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், மே 18க்குள் நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து அறிவிக்கப்படும்.

10. மாநில அரசுகள் அளிக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் நான்காம் கட்ட ஊரடங்கின் விதிகள் மே 18ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் மோடி.

தற்போது இந்தியாவில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இனி நான்காம்கட்ட ஊரடங்கில் குறிப்பிட்ட சிலவற்றுக்கு தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.