சோறு வைத்த எஜமானருக்கு விசுவாசமாக தன்னுயிரை நீத்த நாய்..!!

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் இரயில்வே பழைய பள்ளி வாசல் தெரு பகுதியை சார்ந்தவர் கோவிந்தசாமி (வயது 64). இவர் தனது இல்லத்தில் நாயொன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினத்தின் இரவன்று தனது குடும்பத்தாருடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

அதிகாலை நேரத்தில் நாய் குறைக்கும் சத்தம் அதிகளவு கேட்ட நிலையில், திடுக்கென விழித்து கண்விழித்து பார்த்த கோவிந்தசாமி வீட்டு வாசலுக்கு வந்த பார்த்த சமயத்தில், தனது வீட்டிற்கு முன்னதாக நல்லபாம்பு மற்றும் கண்ணாடி வீரியன் பாம்பு நாயுடன் சண்டையிடுவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இரண்டு பாம்புகள் மற்றும் நாய் நீண்ட நேரம் சண்டையிட்ட நிலையில், நாய் பாம்புகளை கடித்து குதறியது. இதில் பாம்புகள் இருந்த நிலையில், பாம்பின் விஷத்தால் நாயும் சுருண்டு விழுந்துள்ளது. இந்த விஷயம் குறித்து கோவிந்தசாமி கூறுகையில், தங்களுக்காக பாம்பு போராடி தனது உயிரை விட்டுள்ளது. நாயை எங்களின் வீட்டிற்கு அருகே குழிதோண்டி புதைத்துள்ளோம் என்று கண்ணீருடன் கூறினார்.