இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா உறுதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசின் சார்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 6,009 ஆக உயர்ந்துள்ளது. பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,605 ஆக இருந்தது.. மேலும், மொத்த பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்று கரோனாவால் 526 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது. இன்று 219 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,824 ஆக உயர்ந்துள்ளது. இன்று 4 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை சார்ந்த இருவரும், திருநெல்வேலியை சார்ந்த ஒருவரும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 3,043 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 279 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. அரியலூரில் 14 பேருக்கும், செங்கல்பட்டில் 40 பேருக்கும், கடலூரில் 3 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 17 பேருக்கும், பெரம்பலூரில் 31 பேருக்கும், இராணிப்பேட்டையில் 10 பேருக்கும், திருவள்ளூர் 26 பேருக்கும், திருவண்ணாமலையில் 15 பேருக்கும், விழுப்புரத்தில் 67 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 8 பேருக்கும், திருப்பத்தூரில் 4 பேருக்கும், தேனி மற்றும் இராமநாதபுரத்தில் தலா 2 பேருக்கும், திருச்சி, தஞ்சாவூர், நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் திண்டுக்கல்லில் தலா 1 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.