தமிழக பெண்களுக்கும் மற்றும் தமிழக மக்களுக்கும் கிடைத்த வெற்றி.. தேமுதிக விஜயகாந்த்.!!

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யகூடாது என தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார் .

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது. இந்த தீர்ப்பு, மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும் மற்றும் தமிழக மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

கொரானா தொற்று அதிகமாக பரவிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், டாஸ்மாக் கடைகளை திறப்பது, மேலும் கொரானாவை பரப்பும் அபாயம் உள்ளது.

இதுவரை கொரானா தொற்று பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட தமிழக அரசு, உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யாமல் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.