தமிழகத்தில் ஒரே நாளில் அதிகரித்த கொரோனா எண்ணிக்கை.!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசின் சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது கொரோனாவால் 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. 30 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,409 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் 1,458 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இன்று மேலும் 266 பேருக்கு கரோனா உறுதியானதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 1,724 ஆக உயர்ந்துள்ளது.

கடலூரில் 122 பேருக்கும், விழுப்புரத்தில் 49 பேருக்கும், பெரம்பலூரில் 25 பேருக்கும், திண்டுக்கல்லில் 10 பேருக்கும், திருச்சி, செங்கல்பட்டில் 4 பேருக்கும், அரியலூரில் 9 பேருக்கும், திருப்பத்தூர், கரூர், மதுரை, தஞ்சாவூர், இராமநாதபுரத்தில் தலா ஒருவருக்கும், விருதுநகர், திருவாரூர் 2 பேருக்கும், இராணிப்பேட்டையில் 3 பேருக்கும், தென்காசியில் 9 பேருக்கும், திருவண்ணாமலையில் 11 பேருக்கும் கொரோன உறுதியாகியுள்ளது.

இன்று ஒட்டுமொத்தமாக 19 மாவட்டங்களில் கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், சென்னையில் பிறந்து மூன்று நாட்கள் முதல் 50 நாட்கள் ஆன குழந்தைகளில் 3 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பை அடுத்து, பல மாவட்டங்கள் சிவப்பு மாவட்டங்களின் பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.