ஆஸ்துமாவை பிரச்சனையை இயற்கையாகவே சரிசெய்ய வேண்டுமா?

ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோய்.

இது பொதுவாக உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது.

அதுமட்டுமின்றி அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும்.

இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து உரிய சிகிச்சை முறையினை எடுப்பது சிறந்தது. இல்லாவிடின் உயிருக்கு உலை வைத்து விடும்.

அந்தவகையில் ஆஸ்துமாவை பிரச்சனையை இயற்கையாகவே சரிசெய்யும் மற்றும் கட்டுப்படுத்தும் சில எளிய நாட்டு வைத்திய முறைகளைக் பற்றி இங்கு பார்ப்போம்.

  • வெதுவெதுப்பான கடுகு எண்ணெயில் சிறிது உப்பு சேர்த்து நெஞ்சு மற்றும் முதுகுப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை செய்தால், ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
  • நீரில் இஞ்சியை சிறிது தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடிப்பது ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
  • பாலில் பூண்டு பற்களை சிறிது தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி பருக வேண்டும். இந்த பானம் ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
  • உலர்ந்த அத்திப்பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். இப்படி சில மாதங்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனை மாயமாக மறையும்.
  • யூகலிப்டஸ் ஆயில்யை தூங்கும் போது, தலையணை உறையில் சில துளிகள் தடவிக் கொள்ளலாம். இல்லாவிட்டால், சுடுநீரில் சிறிது யூகலிப்டஸ் ஆயிலை சேர்த்து, ஆவி பிடிக்கலாம். தினமும் ஒருமுறை இப்படி ஆவி பிடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • சிறிது வெங்காயத்தை சாலட்டில் பச்சையாக சேர்த்து சாப்பிட வேண்டும். அப்படி தினமும் ஒருமுறை உட்கொண்டு வந்தால், ஆஸ்துமா அறிகுறிகள் மறைய ஆரம்பிக்கும்.சுடுநீரில் சிறிது பட்டைத் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்சனை அகலும்.
  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையை பிழிந்து தேன் கலந்து, தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.