ஏரியில் குளிக்க சென்ற 4 பெண்கள் அடுத்தடுத்து பலி.. பெரும் சோகம்.!!

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் கரசங்கால் பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் அப்பகுதி வாசிகள் சென்று குளிப்பது, துவைப்பது என்று இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று ஏரிக்கு துணி துவைக்க நாலு பெண்கள் சென்றுள்ளனர். இவர்களில் சித்ரா என்ற பெண்மணி கரையில் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்த நிலையில், மீதி மூன்று பேரும் நீரில் குளித்துக் கொண்டிருந்தனர்.

இவர்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக சேற்றுக்குள் சிக்கவே, இவர்கள் மூவரும் நீரில் தத்தளித்த உள்ளனர். இதையடுத்து இவர்களை கண்டு அதிர்ந்துபோன சித்ரா, மூவரையும் காப்பாற்ற முயற்சித்துள்ளார்.

இந்த சமயத்தில். அவரும் நீரில் பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனைகண்டு கொண்டிருந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இவர்களின் உடல்களை மீட்டு உள்ளனர்.

மேலும், முதலில் ஒரு பெண் நீரில் மூழ்கிய நிலையில், காப்பாற்ற சென்ற மூவரும் ஒருவர் பின் ஒருவராக பலியானது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.