இந்திய மண்ணில் இந்தியாவை தோற்கடிக்க வேண்டும்..!! அவுஸ்திரேலியா

இந்திய மண்ணில் இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்ற தனது உச்சபட்ச குறிக்கோளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஐ.சி.சி டெஸ்ட் அணி தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. இதில், அவுஸ்திரேலிய முதலிடத்தை பிடித்தது, நியூசிலாந்து 2வது இடத்தையும், இந்தியா 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் அவுஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தை பிடித்த நிலையில் மகிழ்ச்சி தெரிவித்த லாங்கர், தனது உச்சபட்ச குறிக்கோளை பற்றியும் குறிப்பிட்டார்.

நிச்சயமாக எங்களின் குறிக்கோள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகும். ஆனால் உச்சபட்ச குறிக்கோளாக , நாங்கள் இந்தியாவில் இந்தியாவை வெல்ல வேண்டும், அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பி வரும்போது நாங்கள் அவர்களை வெல்ல வேண்டும்.

சிறந்த அணியை வென்றால் மட்டுமே நாம் சிறந்தவர்கள் என்று நாமே தீர்மானிக்க முடியும் என்று லாங்கர் கூறினார்.

2004/05 முதல் அவுஸ்திரேலியா இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்லவில்லை, 2004/05 ஆண்டு நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற வெற்றி கணக்கில் அவுஸ்திரேலியா சொந்த மண்ணில் இந்தியாவை தோற்கடித்தனர். லாங்கர் அந்த அணியின் ஒரு பகுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.