மூளைக்காய்ச்சல் ஒருவருக்கு எப்படி வருதுன்னு தெரியுமா?

பல்வேறு காய்ச்சல்கள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் ஓரளவுக்கு இருந்தாலும், அதிக விழிப்புணர்வு இல்லாத நோய் மூளைக்காய்ச்சல்தான்.

இது மனித உயிரைப் பறிக்கும் ஆபத்தை கொண்டது என்று சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. குழந்தைகள் முதல் வயதானோரை மூளை காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

வளர்ந்துவரும் ஏழை நாடுகளில் மூளை காய்ச்சலின் பாதிப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

வைரஸ் கிருமிகளால் மூளையும், நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போய்விடுவதுதான் மூளைக் காய்ச்சல். இந்த நோய் பெரும்பாலும் குழந்தைகளைத்தான் தாக்குகிறது.

மூளைக்காய்ச்சல் கடுமையான மூளை தொற்று நோய். இது குழந்தைகளை பெரிதளவு பாதிக்கிறது. இந்த நோயை ‘ஜப்பானிய மூளை காய்ச்சல்’ எனவும் மருத்துவ அறிவியல் சொல்கிறது.

மூளை காய்ச்சலை ‘மெனிஞ்சைடிஸ்’என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். தமிழில் மூளைச் சவ்வு அழற்சி என்று பொருள்.

இந்நோய் ஏற்பட்டால் கை கால்கள் செயல் இழந்து போகும். வலிப்பு மற்றும் கண்கள் பாதிக்கப்படும். காது கேட்காமல் நிரந்தரமாக பாதிப்பை ஏற்படுத்தும்.

அம்மை, மணல்வாரி அம்மை, ரூபெல்லா, சைட்டோ மெகாலோ வைரஸ், எப்ஸ்டீன் வைரஸ், பாக்ஸ் வைரஸ், ஈக்குன் வைரஸ், ரேபிஸ் வைரஸ், டெங்கு வைரஸ் போன்றவை அதிகளவில் மூளையைப் பாதிக்கும் வைரஸ்கள்.

நோய்க் கிருமிகளின் வீரியம், நோயாளியின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புத் திறன், மூளையில் உள்ள நீரின் அழுத்தம் ஆகியவைதான் மூளைக்காய்ச்சலின் பாதிப்பை தீர்மானிக்கின்றன.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், இந்த நோயின் தாக்கம் குறைவாக இருக்கும்.

மூளைக்காய்ச்சல் மூன்று வகை கொண்டது. அறிகுறிகள் இல்லாமல், நோயின் தாக்கம் குறைவாக இருப்பது, மூளையின் பாதுகாப்பான் ஜவ்வைத் தாக்கிறது. மூளையில் பாதுகாப்பான ஜவ்வையும், மூளையையும் மிகத் தீவிரமாகத் தாக்கி நரம்பு மண்டலத்தை செயல் இழக்கச் செய்கிறது.

அது மட்டுமல்லாமல் மூளை காய்ச்சல் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. இரண்டு முதல் 15 நாட்கள் வரை தான் அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். உடனே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லது நல்லது.

இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் வருவதற்குச் சில காரணங்கள் உள்ளன. அவர்களின் மூளை வேகமாக வளரும் பருவம் கொண்டிருப்பதாலும், சின்ன வயதில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதாலும் குழந்தைகளுக்கு இந்நோய் வருவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இதுபோன்ற காரணங்களால் தொற்றுகள் சுலபமாக குழந்தைகளை தாக்குகின்றன. இதனால் குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் எளிதில் வந்துவிடுகிறது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ள வயதானவர்களுக்கும் இந்த நோய் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இந்நோயின் அறிகுறிகள்

உடலில் மிக அதிகமான காய்ச்சல் இருக்கும், கடுமையான தலைவலி வரும், குமட்டல் வாந்தி வந்துகொண்டே இருக்கும்,

நினைவிழத்தல், வலிப்பு, இதயம் மற்றும் சுவாச உறுப்புகள் செயலிழ்ந்து போகும், கண் தசை நார்கள் செயல்களை இழக்கும், கை, கால்கள் முடங்கி போகும்,

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இருந்தாலோ, குழந்தை திடீரென்று நினைவிழந்தாலோ, வலிப்பு வந்தாலோ உடனே குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது அவசியம்.