நடந்த வந்த நபர் நொடிப்பொழுதில் மரணித்த சோகம்! சிசிடிவி காட்சி!!

இந்திய மாநிலமான தமிகழத்தில் மதுரையில் மருந்து வாங்குவதற்காக சென்ற முதியவர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சொக்கலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் முதியவரான ஜெகநாதன். கடந்த சில தினங்களுக்கு முன்பு மருந்து வாங்குவதற்காக அருகில் உள்ள மருந்துக்கடைக்கு சென்றுள்ளார். சாலையில் சென்றுகொண்டிருந்த அவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் உதவி செய்ய யாரும் இன்றி சம்பவ இடத்திலேயே ஜெகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பாதிவாகியுள்ளது. அதில் அவர் நடந்து வருவதும், திடீரென சாலையில் மயங்கி விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது.

அப்போது ஒரு சிலர், இது கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் நோய் முற்றியதால் சாலை மயங்கி விழுந்து உயிரிழந்தார் என வதந்தி பரப்பியுள்ளனர். இது பொய்யான தகவல் என்றும் அவர் வலிப்பு வந்துதான் இறந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.