தமிழகத்தில் காலையிலேயே வெளுத்து வாங்கும் மழை..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் மழை பெய்யும். ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், சத்தியமங்கலம், அப்பம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை, கோவை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.