டிக் டாக் காதலனை தேடி, சாலை மார்க்கமாக மதுரை பயணிக்கும் பெண்மணி…!!

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்ட்டதை சார்ந்த இளம்பெண் பி.எஸ்.சி பட்டதாரியாக இருக்கிறார். இவருக்கு பொழுதுபோக்கிற்க்காக டிக் டாக் செயலி அறிமுகம் ஆன நிலையில், டிக் டாக் செயலியில் பல விடீயோக்களை பதிவு செய்து வந்துள்ளார். இந்த சமயத்தில், மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரப்பாளையம் பகுதியை சார்ந்த வாலிபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

முதலில் இருவரும் விடீயோக்களை மாறி மாறி பதிவு செய்து வந்த நிலையில், பெண் வாலிபரை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரியவருகிறது. இந்த விசயத்தை பெண் வெளிப்படையாக தெரிவித்தாகவும், இதனை வாலிபர் ஏற்க மறுப்பு தெரிவித்ததாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில், காதலில் பெண் தீவிரமாக இருந்து வரும் காரணத்தால், தொடர்ந்து காதலை தெரிவித்து வந்துள்ளார்.

ஊரடங்கு தற்போது அமலில் இருக்கும் நிலையில், கடந்த வாரத்தின் போது வாலிபரை காண தஞ்சாவூரில் இருந்து நெடுஞ்சாலை வழியாக மதுரைக்கு நடந்து வருவதாக டிக் டாக் மூலமாகவே விடியோக்கள் பதிவு செய்துள்ளார். மேலும், சாலையில் வரும் வழியில் டிக் டாக் வீடியோ செய்து பதிவு செய்தபடி வந்துள்ளார். இப்படியாக இவர் மேலூருக்கு வந்துள்ள நிலையில், இது குறித்த வீடியோ காட்சியை காணும் பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.