திடீரென தொப்பையை குறைக்கணுமா?

இன்றைய காலக்கட்டத்தில் உணவுப் பழக்கத்தால் நாளுக்கு நாள் உடல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலர் கடுமையாக உடற்பயிற்சிகளை செய்வார்கள். இருந்தாலும் தொப்பை மட்டும் சீக்கிரம் கரையாது.

அப்படிப்பட்டவர்களுக்கு உடற்பயிற்சிகளுடன் கீழ் வரும் இயற்கை மூலிகை பொருட்களை வைத்து சீக்கிரம் தொப்பையை குறைத்து விடலாம். ட்ரை பண்ணி பாருங்க:

அன்னாச்சிப் பழம்

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு நன்றாக வேக வைத்து காலை எழுந்து அதனை வெறும் வயிற்றில் கரைத்து குடித்து வந்தால் 30 நாட்களில் உங்கள் தொப்பை குறையும்.

இஞ்சி சாறு

இஞ்சிசாறு ஒரு டம்ளர் மற்றும் தேன் இரண்டு டம்பளர் இதனை இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து காலை, மாலை குடித்து வந்தால் 40 நாட்களில் உங்கள் தொப்பை கரையும்.

தண்ணீர்

தினமும் குறைந்தது 7-8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிட்டால் உடல் சீராக ஆரோக்கியமாக இருக்கும். அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்து வர வேண்டும். இதனால் உங்கள் உடலில் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இது உங்கள் தொப்பையை குறைக்க தண்ணீர் வழிவகை செய்கிறது.

தேன்

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உங்கள் உடல் மெலியும். கொதிக்கும் நீரில் தேன் கலக்கக்கூடாது மிதமான சூட்டில் மட்டும்தான் தேன் கலக்க வேண்டும். இப்படி 30 நாட்களுக்கு குடித்து வந்தால் உங்கள் தொப்பைகுறையும். உடல் எடையும் குறையும்.

பட்டை

தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடிக்கலாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பட்டை சீராக வைக்க உதவுகிறது. தொப்பை குறைக்க பட்டையை தினமும் காலையிலும், மாலையிலும் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இதனால் உங்கள் தொப்பை காணாமல் போய்விடும்.

க்ரீன் டீ

தினமும் க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடிக்கலாம். இதனால் தொப்பை குறைய வாய்ப்பு உள்ளது.

எலுமிச்சை சாறு

வயிற்றைச் சுற்றியிருக்கும் கொழுப்பை குறைக்க ஒரே வழி தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிக்கலாம். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும்.