கர்ப்பிணி பெண் தீயிட்டு கொளுத்தப்பட்ட விவகாரம்.. குழந்தையை பரிதவிக்கவிட்டு விண்ணுலகம் பயணித்த தாய்..

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த போட்டுவாசடி பகுதியை சார்ந்த கோவிந்தராஜனின் மகளை சங்கீதாவிற்கும் (வயது 20), சூரியம்பட்டி பகுதியை சார்ந்த ராமைய்யன் என்பவரின் மகன் முருகானந்தத்திற்கும், கடந்த பிப்ரவரி மாதத்தின் போது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

திருமணம் நடந்து முடிந்த நாட்களில் இருந்து சங்கீதாவின் மாமியார் புஷ்பவள்ளி, மருமகளை மகளாக நினைக்காது வரதட்சணை கொடுமை செய்யவே, அத்துணை கொடுமையையும் தாங்கிக்கொண்ட பெண்மணி கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.

மனைவியிடம் தாய் நடந்துகொள்ளும் முறையை கண்டுகொள்ளாத கணவன், சங்கீதாவை தாக்கிய மாமியார், மாமனார், கொழுந்தன் என அனைவரும் வரதட்சணை கொடுமை செய்துள்ளனர். சங்கீதாவின் குழந்தை உயிருடன் இருக்க கூடாது என்று கூறி புஷ்பவள்ளி சங்கீதாவின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துள்ளார்.

சங்கீதா அங்குள்ள தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த சம்பவம் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. இவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பெண்மணி உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சங்கீதாவின் கணவர் மற்றும் மாமியார் புஷ்பவள்ளியின் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.