நண்பனின் அக்காவுடன் கள்ளக்காதல்… நண்பனை வீடு புகுந்த சரமாரியாக தாக்கிய சம்பவம்.!!

தமிழகத்தின் செங்குன்றம் பகுதியை அடுத்துள்ள பாடியநல்லூர் ஊராட்சி பாகுதியை சார்ந்தவர் ஆனந்தன் (வயது 34). இவர் பைனான்சியராக பணியாற்றி வரும் நிலையில், இதே பகுதியை சார்ந்த உதயா, சுந்தர் மற்றும் ஆனந்தன் ஆகிய மூன்று பெரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.

உதயாவிற்கு அக்கா இருக்கும் நிலையில், உதயாவின் அக்காவிற்கும் – ஆனந்தனிற்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கள்ளக்காதல் பழக்கம் இருந்துள்ளது. இந்த விஷயம் உதயாவிற்கு தெரியவரவே, கள்ளக்காதலை கைவிட கூறி ஆனந்தனிடம் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனைகண்டுகொள்ளாத ஆனந்தன் கள்ளக்காதல் உறவில் தொடர்ந்து ஈடுபடவே, ஆத்திரமடைந்த உதயா நண்பர் சுரேஷுடன் சேர்ந்து ஆனந்தனின் இல்லத்திற்கு சென்று சரமாரியாக ஆனந்தனை வெட்டியுள்ளார். ஆனந்தன் தற்போது அங்குள்ள அரசு ஸ்டாண்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விஷயம் தொடர்பாக ஆனந்தனின் மனைவி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உதயா மற்றும் சுரேந்தரை கைது செய்துள்ளனர்.