கொரோனாவை எதிர்த்து போராடுகிறவர்களுக்காக யாரும் செய்யாத ஆச்சரிய செயலை செய்த லண்டன் இளைஞன்!

லண்டனை சேர்ந்த இளைஞன் கொரோனாவை எதிர்த்து போராடுபவர்களை பாராட்டும் விதத்திலும் அது தொடர்பில் நிவாரண நிதிக்காகவும் தொடர்ந்து 24 மணி நேரம் கைத்தட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் ஒவ்வொரு வியாழன் அன்றும் இரவு 8 மணிக்கு மக்கள் எல்லோரும் சில நிமிடங்கள் கைத்தட்டி கொரோனாவுக்கு எதிராக போராடுகிறவர்கள், இந்த இக்காட்டான நேரத்தில் உதவுபவர்களுக்கு நன்றி கூறியும் பாராட்டு தெரிவித்தும் வருகிறார்கள்.

தங்கள் வீட்டு வாசலில், பால்கனியில் நின்றபடி இந்த விடயத்தை செய்கிறார்கள்.

ஆனால் லண்டன் இளைஞனும், சினிமா இயக்குனருமான ஜாக் பீகாம் (25) என்பவர் ஒரு படி மேலே போய் இது தொடர்பில் நெகிழ்ச்சியான விடயத்தை செய்துள்ளனர்.


அதாவது தொடர்ந்து 24 மணி நேரம் கைத்தட்டி அவர் கொரோனா நிதி வசூலில் ஈடுபட்டுள்ளார்.

இதோடு கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புறவு பணியாளர்கள் என அனைவருக்கு நன்றி கூறி பாராட்டவும் இந்த விடயத்தை ஜாக் மேற்கொண்டார்.

அவர் எதிர்பார்த்த மாதிரியே கொரோனா நிதி வசூல் ஆகியுள்ளது என தெரியவந்துள்ளது.

ஜாக்கின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர், நிதி அளித்த ஒருவர் கூறுகையில், யாருமே செய்யாத செயலை நீங்கள் செய்துள்ளீர்கள் என கூறியுள்ளார்.