மின்சாரத்தட்டுப்பாடு.. தமிழகத்தில் தொடர்மின்வெட்டா..?

தமிழகத்தில் மின்சார உற்பத்தியை அரசு குறைத்துள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மின்வெட்டு ஏற்படக்கூடிய நிலை இருக்கிறது என தொழில் சங்கங்கள் எச்சரித்துள்ளனர்.

நாடு தழுவிய முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து தொழில்களிலும் முடங்கியுள்ள நிலையில், தொழிற்சாலைகள் முதல் ஐடி நிறுவனங்கள் வரை அனைத்தும் முடங்கியுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவை வெகுவாக குறைந்து விட்டது. இதனைத்தொடர்ந்து அரசு 6 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தியிணை குறைத்து உள்ளது., என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

மக்கள் நலம் மிக முக்கியம் என்பதனால் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று கூறினார். அரசு தொழிற்சாலைகளின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு மின்சார உற்பத்தி குறைத்து உள்ளது.

கோடைகாலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும் சூழல் உள்ளது. அதற்கு ஏற்றவாறு மின்சாரம் உற்பத்தி செய்யவில்லயானால் தொடர்மின்வெட்டுகூட ஏற்படும் அபாயம் வரலாம் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளனர்.