விக்ரம் இனி நடிக்கவே மாட்டாரா?காரணம் இதுவா ??

விக்ரம் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர். இவர் நடிப்பில் தற்போது கோப்ரா படம் உருவாகி வருகிறது.

இதை தொடர்ந்து பிரமாண்ட பட்ஜெட் படமான பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் தற்போது ஒரு அதிர்ச்சி முடிவு எடுத்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

அதில் விக்ரம் இனி சினிமாவில் நடிக்க போவதில்லை, நடிப்பிற்கு புல் ஸ்டாப் வைத்துள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் இனி துருவ் விக்ரமை தமிழ் சினிமாவில் பெரியாளக்க இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வந்துக்கொண்டு இருந்தது.

இதற்கு விக்ரம் தரப்பு கடுமையாக மறுத்துள்ளது, யாரை கேட்டு இப்படியான செய்தியை வெளியிடுகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.