தெறி, பிகில் பட இயக்குனர் அட்லீ செய்த மாஸான செயல்!

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என மூன்று ஹிட் படங்களையும் இயக்கியவர் இயக்குனர் அட்லீ. கடந்த வருடம் வெளியான பிகில் படம் ரூ 300 கோடி வசூல் செய்து பிளாக் பஸ்டர் சாதனை செய்தது.

அட்லீ விஜய்யின் தீவிர ரசிகர் கூட. இளம் வயதில் விஜய்யை வைத்து படம் இயக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஒன்றா, இரண்டா தொடர்ந்து மூன்று படங்கள்.

கதை விசயத்தில் அவரின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்தாலும் அவரின் சாதனை பெரிது. இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

தற்போது கொரோனா நோய் பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை.

இதனை வேலையை இழந்த சினிமா ஊழியர்கள் பலருக்கு சங்கம் மூலம் உதவி செய்ய பல நடிகர்கள், நடிகைகள் முன் வந்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் அட்லீ ஃபெப்ஃபி அமைப்புக்கு ரூ 5 லட்சமும், இயக்குனர்கள் சங்கத்திற்கு ரூ 5 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளார்.